2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

பாலம் திறந்துவைப்பு

Janu   / 2023 ஜூலை 09 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி மாவட்டம் நாவலப்பிட்டி பிரதேசத்தில் கலபட தோட்டம் அமைந்துள்ளது. இத்தோட்ட பிரதேசத்தில் வாழும் மக்களும் , பாடசாலை மாணவர்கள் அனைவருமே  அன்றாடம்  பயணங்களின் போது  தோட்டப்பிரதேசத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஓடையினை கடந்தே (ஆறு)   பயணங்களையும் கடமைகளையும்   மேற்கொள்வது வழக்கமாகும்.

 மழைக்காலங்களில் இவர்களின் பயணங்களின் போது பல அசொளகரியங்களுக்கு முகங் கொடுத்து வருவதோடு மழைக்காலங்களில்  பயணங்களை மேற்கொள்ளும் பொழுது பாரிய விபத்துகளுக்கும்,உயிர் ஆபத்துகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றார்கள்.

 எனவே ,இத்தோட்ட பிரதேச மக்களின் நலனை கருத்திற் கொண்டு இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பினால் இவ் நடை பாலத்தினை நிர்மாணித்து  ஞாயிற்றுக்கிழமை (09) காலை 10 மணியளவில் மக்களின் பயன்பாட்டிற்காக  திறந்து வைக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X