Kogilavani / 2021 ஜனவரி 21 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
அம்பகமுவ பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியிலிருந்து வெலிஓயா தண்டுகலா கீழ் பிரிவுக்குச் செல்வதற்கு, பாலம் ஒன்று இன்மையால், தோட்டத்தில் வசிக்கும் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மேற்படி மக்கள், ஹட்டன், நோட்டன் பிரிட்ஜ் ஆகிய நகரங்களுக்குச் செல்வதற்காக, தோட்டத்தைச் ஊடறுத்துச் செல்லும் ஆற்றைக் கடந்தே செல்ல வேண்டியுள்ளது.
மழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, ஆற்றைக் கடந்துச்செல்ல முடியாத நிலைக்கு இவர்கள் தள்ளப்படுகின்றனர்.
இதேவேளை ஆற்றில் காணப்படும் பாரிய கற்பாறைகளைக் கடந்தே செல்லவேண்டியதால், ஆரம்ப வகுப்பு மாணவர்களை பெற்றோர் தங்களது தோலில் சுமந்துக்கொண்டு செல்லும் நிலையும் காணப்படுகிறது.
மழைக் காலங்களில், மாணவர்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாமல் இருப்பதுடன் அவர்களின் கல்வி முற்றாகப் பாதிக்கப்படுவதாகவும் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
2007ஆம் ஆண்டு இந்த ஆற்றைக் கடக்க முயன்ற 67 வயதுடைய வயோதிபர் ஒருவர், காலிடறி ஆற்றில்விழுந்து பரிதாபகரமாக மரணமடைந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே இந்த ஆற்றைக் கடப்பதற்கு, பாதுகாப்பான முறையில் பாலமொன்றை அமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

19 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
3 hours ago