Editorial / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்
களுத்துறையில் தோட்டத் தொழிலாளி ஒருவரின் சடலத்தை, நீதிமன்ற உத்தரவை மீறி, காணியொன்றில் பலவந்தமாகப் புதைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும உள்ளிட்ட ஐவரை விடுதலை செய்யக்கோரி, ஹட்டன் என்பீல்ட், நோனாதோட்டத்தில், இன்று (15) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மலையக தன்னெழுச்சி இளைஞர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தக் கவனயீர்ப்பு போராட்டம், நோனாதோட்டத்தில் ஸ்ரீ செல்வவிநாயக கோவிலுக்கு முன்பாக இடம்பெற்றத.
உண்மையாக சேவை செய்யும் தலைவர்களை இணங்காண்போம்: ஏமாற்று தலைவர்களை வெளியேற்றுவோம்; பாலித்த விடுதலைக்கு இறை ஆசி வேண்டி பூஜை செய்வோம் போன்ற பதாதைகளை ஏந்தி, சுமார் 75க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, செல்வ விநாயகர் கோவிலில், தேங்காய்கள் உடைத்து விசேட பூஜைகளிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தப்பது.






2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago