2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பாவனைக்குதவாத பொருள்கள் பாடசாலைகளுக்கு விநி​யோகம்

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 28 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

பொகவந்தலாவை பிரதேச பாடசாலைகளுக்கு காலாவதியான திகதியுடன்   வண்டு, பூச்சிகளுடனான கௌபி, கடலை என்பவற்றை விநியோகித்த வர்த்தகர்களுக்கு எதிராக பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள், ஹட்டன் நீதவான் நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

தற்போது நவராத்திரி விரதம் ஆரம்பமாகியுள்ள நிலையில், பாடசாலைகளில் நடைபெறும் நவராத்திரி பூஜைகளுக்காக பொகவந்தலாவை நகரில் கௌபி, கடலை உள்ளிட்ட பொருள்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

அவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட பொருள்கள் தரமற்றதாகவும் காலாவதியாகியுள்ளதாகத் தெரிவித்து, பாடசாலை அதிபர்களால் பொகவந்தலாவை பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, நேற்று (27) பொகவந்தலாவை நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது அதிகமான வண்டுகள்,பூச்சிகள் காணப்பட்ட பொருள்களை பாடசாலைகளுக்கு விநியோகிப்பதற்காக சேகரித்த 3 வர்த்தகர்களுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X