2026 மே 09, சனிக்கிழமை

dd

பிரதேச சபை உறுப்பினரை தாக்கியவருக்கு சரீரப்பிணை

Editorial   / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசறை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான கண்மணி சிவநேசன் மீது தாக்குதல் மேற்கொண்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பதுளை நீதவான் நீதிமன்றத்தில், இன்று (28) ஆஜர்செய்யப்பட்டபோது, 5 இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில், அவர் விடுதலை செய்யப்பட்டார்.

காயமடைந்த நபர், இன்னும் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பசறை பிரதேச சபை அமர்வில் கலந்துகொண்டு விட்டு, எல்டப் பகுதிக்குச் சென்ற போதே, பசறை நகரின் மத்தியில் வைத்து மரம் வெட்டும் வியாபாரிகள் தன்னை வழிமறித்துத் தாக்கதியதாக, தாக்குதலுக்குள்ளான நபர், தனது பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

மேற்படிப் பகுதியில் பாலம் ஒன்று புனரமைக்கப்படவுள்ளதாகவும் அது தொடர்பில் ஆரய்வதற்காகச் சென்றபோதே, தான் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .