R.Maheshwary / 2021 நவம்பர் 03 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா பிரதேச சபை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் சீ.பி.எம்.உயன்கொட மூன்று மாதங்களுக்கு சபை நடவடிக்கையில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா பிரதேச சபையின் நவம்பர் மாதத்திற்கான மாதாந்த அமர்வு சபை தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில் இன்று (03) காலை இடம்பெற்றது.
இதன் போது, நுவரெலியா பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் உயன்கொட, நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மக்களின் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பரப்பி வருவதாக கண்டறியப்பட்டு ,அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் சபை தவிசாளர் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
அத்துடன் அவரை மூன்று மாதங்களுக்கு சபை அமர்வுகளிலிருந்து இடைநிறுத்தும் படி அனைத்து உறுப்பினர்களும் தமது கைகளை உயர்த்தி தீர்மானத்தை நிறைவேற்றுமாறு தெரிவித்தனர்.
இதனடிப்படையில் உறுப்பினர் அஜீத் உயன் கொடவின் செயற்பாடுகளை கண்டித்த தவிசாளர் வேலு யோகராஜ், இவரை சபை உறுப்பினர்களின் அனுமதியுடன் எதிர்வரும் முன்று மாதங்களுக்கு சபை நடவடக்கைகளில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்தார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .