2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பிரதேச செயலகத்தில் மக்கள் குவிந்தனர்

Mayu   / 2024 டிசெம்பர் 02 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா பிரதேச செயலகத்தில் வழங்கப்படும் இரண்டாம் கட்ட புதிய அஸ்வெசும நலன்புரி நன்மைகள் விண்ணப்ப படிவங்கள் பெற்றுக்கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.

சனி மற்றும் ஞாயிறு தினங்கள் விடுமுறை என்பதால் திங்கட்கிழமை (02) நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு முன்னால் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்வதற்காக பிரதேச மக்கள் இவ்வாறு ஒரே நேரத்தில் கூடியுள்ளனர்.

எனினும் குறித்த அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கும் நடவடிக்கை உரிய முறையில் மேற்கொள்ளவில்லை எனவும் வரிசையினை நெறிப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் திணைக்கள உத்தியோகஸ்த்தர்கள் யாரும் செயற்படவில்லை எனவும், குறித்த நலன்புரி நன்மைகளை பெற்றுக்கொள்வதற்கு சரியான நடைமுறை பின்பற்றபடவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் நிலவிய வானிலை சீற்றத்தினால் பெய்த கடும் மழை காரணமாக கடந்த வாரங்கள் பொது மக்கள் வருகை சற்று குறைவாக இருந்தது தற்போது சீரான காலநிலை நிலவி வருவதனால் பலரும் வருகை தந்ததன் காரணமாக இவ்வாறு நெரிசல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

டி.சந்ரு செ.திவாகரன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X