Editorial / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
- இக்பால் அலி
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரித்தானியாவுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்குள்ள இலங்கையர்களுடனான சந்திப்பில், கண்டி - திகனை பகுதியில் ஏற்பட்டக் கலவரம் சம்பந்தமாகத் தெரிவித்தக் கருத்துகள் அனைத்தும், முற்றுமுழுதாகப் பொய்யானவையென்று, முற்போக்கு முஸ்லிம் முன்னணியின் தேசிய அமைப்பாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.
திகனையில் இடம்பெற்றத் தாக்குதல் சம்பவத்தை, உடனடியாகத் தடுத்து நிறுத்தாமல், இரண்டு, மூன்று நாட்கள் முஸ்லிம்களைத் தாக்குதலுக்கு இலக்காக வைத்துவிட்டு, அதன் பின்னரே, அச்சம்பவத்தைத் தடுத்து நிறுத்தக்கூடிய முயற்சியில் ஈடுபட்டதென்பது, நாடே அறியுமெனத் தெரிவித்த அவர், இந்தச் சம்பவம், சமூக வலைத்தளங்களால் சோடிக்கப்பட்டதென்றும் இது சம்பந்தமாக, அரசாங்கத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதென்றும், பிரித்தானியாவில் உள்ள இலங்கையர்கள் அனைவரையும் முட்டாளாக்கும் வகையில், ஜனாதிபதி பொய்யுரைத்துள்ளாரெனவும் குற்றஞ்சாட்டினார்.
சர்வதேசச் சந்திப்பொன்றில், பல ஊடகங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, இவ்வாறான கருத்தை வௌியிட்டு, முஸ்லிம் மக்களை ஜனாதிபதி மீண்டும் கோழைகளாக்க முயற்சிப்பதாகவும் இது சம்பந்தமாக, அரசாங்கத்தின் பங்காளிகளாக உள்ள உறுப்பினர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள், ஜனாதிபதியைத் தெளிவுபடுத்த வேண்டுமெனவும், அப்துல் சத்தார் கோரினார்.
8 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago