2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

பீரட் தோட்டத்தில் 14 குடும்பங்களுக்கு உதவி

Kogilavani   / 2021 ஜனவரி 19 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிக்கோயா பீரட் தோட்டத்தில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள 14 குடும்பங்களுக்கு, திகா-உதயா நிவாரணத் திட்டத்தின் கீழ், உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. 

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  பழனி திகாம்பரம், பிரதித் தலைவர் மயில்வாகனம் உதயகுமார் எம்.பி  ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக,  இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. 

மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் பிலிப், பிரதிப் பொதுச்செயலாளர் கல்யாணகுமார், பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமாரின் இணைப்பாளர் ஸ்ரீதர், பிரதேச அமைப்பாளர் கேசவன் ஆகியோர் மேற்படித் தோட்டத்துக்குச் சென்று, நிவாரணப் பொருட்களைக் கையளித்தனர்.

வட்டவளை ஆடைத் தொழிற்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய பீரட் தோட்டத்தைச் சேர்ந்த மூன்று யுவதிகள், தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மேற்படி யுவதிகளோடு தொடர்பைப் பேணிய 14 குடும்பங்களே, மேற்படித் தோட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X