Editorial / 2021 மே 18 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஏ.எம்.பாயிஸ்)
எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் பீ.சீ.ஆர் அறிக்கைகள் தாமதமடைவதால் மக்கள் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்பிலிப்பிட்டிய மற்றும் அயல் பிர தேசங்களில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணமடைவோரின் பீ.சீ.ஆர்.வைத்திய அறிக்கைகள் தாமதமாகக் கிடைப்பதால் அப் பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தென்னிலங்கை பிரதான சங்கநாயகரும் எம்பிலிபிட்டிய போதிராஜா ராமய விகாரையின் பிரதம தேரருமான ஓமல்பே சோபித தேரர் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் ”கொரோனாத் தொற்றினால் மரணிக்கும் நோயாளர்களி ன் பீ.சீ.ஆர்.அறிக்கைகள் உறவினர்களுக்கு கிடைக்க ஒரு வாரத்துக்கு மேல் செல்கிறது. இதனால் இக்குடு ம்பத்தினர் பல வழிகளிலும் பாதிப் படைகின்றனர்.
குறிப்பாக இவ்வறிக்கை காலதாமதம் அடைவதால் அநாவசியமான செலவுகளும் பல்வேறு அசெளகரியங்களும் ஏற்படுவதோடு தொற்று பரவும் ஆபத்தும் அதிகரிக்கிறது.
எனவே வசதி படைத்தோர் எம்பிலிப்பிட்டிய அர ச வைத்தியசாலைக்கு பீ.சீ ஆர். இ யந்திரமொன்றைக் கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ள நிதியத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்” எனத் தெரிவித்தார்.
17 minute ago
37 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
37 minute ago
56 minute ago
2 hours ago