2026 மே 09, சனிக்கிழமை

dd

புகையிலை வளர்த்தால் சட்ட நடவடிக்கை

செ.தி.பெருமாள்   / 2019 செப்டெம்பர் 19 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை செடிகள், வலப்பனை பகுதிகளிலுள்ள வயல் நிலங்களுக்கு அருகில் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது என்று தெரிவித்த நுவரெலியா மாவட்ட அரச அதிபர் ரோகன புஸ்பகுமார, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில், சமீபத்தில் இடம்பெற்ற செயலமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்.

புகையிலை விவசாயம், இலங்கையில் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் இருந்தபோதும்,  அங்குள்ள விவசாயிகள் புகையிலையை பயிரிட்டிருப்பது குற்றமாகும் என்றும் அவர் கூறினார்.

அம்பனெல்ல, மடுல்ல, யட்டிமாதுற ஆகிய பிரதேசங்களில், 10க்கு அதிகமானவர்களின் வயல்காணிகளில் புகையிலை பயிரிடப்பட்டுள்ளது என்றும் இவ்வாறு பயிரிட்டவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .