Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 05 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
“இந்த நாட்டில் எதிர்வரும் தேர்தல் எதுவாக இருந்தாலும் சரி, அந்தத் தேர்தலில் இந்த அரசாங்கத்துக்கு மக்கள் எதிர்ப்பானவர்கள் என்பதை எடுத்துக்காட்டி, தேர்தலை வெற்றிகொண்டு, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கிக் காட்டுவோம்” என, முன்னாள் விளையாட்டுதுறை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் மக்கள் சந்திப்பு, கினிகத்தேனை பிடாஸ் விடுதியில் இன்று (05) நடைபெற்றது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, காமினி லொகுகே, சீ.பீ.ரத்நாயக்க மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மஹிந்தானந்த அலுத்கமகே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த நாட்டை பாரிய நெருக்கடிக்குள்ளாக்கி நல்லாட்சி எனும் பேரில் அரசாங்கத்தை முன்னெடுத்து செல்கின்றனர். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வெளிநாட்டவருக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கியுள்ளனர். இந்த துறைமுகத்தின் ஊடாக இந்த நாட்டின் அரசாங்கம் பயனைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றது.
“ஹம்பாந்தோட்டை அபிவிருத்தியின் ஊடாக பாரிய பொருளாதார நெருக்கடிகளை இல்லாதொழிக்கலாம். ஆனால், இந்தத் துறைமுகத்தை வெளிநாட்டவருக்கு கொடுப்பதனால் இதில் கிடைக்கும் இலாபத்தை நாட்டின் தலைவர்கள் சிலர் தனது சட்டைப் பையிக்குள் நுழைக்கும் நிலை உருவாகியுள்ளது.
“எதிர்த்துக் கேட்டால் எம்மை சரியில்லை என்று இன்றும் எமக்கு எதிராக நடவடிக்கைகளையும் முன்னெடுக்கின்றனர். இந்த நிலையில், இந்த அரசாங்கத்தை மக்கள் வெறுத்து வருகின்றனர்.
“எதிர்வரும் காலத்தில் நாட்டில் உள்;ராட்சி மன்ற சபைகளின் தேர்தல்களை நடத்தப் போவதாக தெரிவிக்கின்றனர். ஆனால், இவர்களின் தேர்தல் முறையானது பழைய ஆடைத் தொழிற்சாலை போல் அமைகின்றது.
“எதிர்வரும் காலத்தில் எந்த தேர்தலை நடத்தினாலும் அந்தத் தேர்தலில் இவ் அரசாங்கத்துக்கு எதிரான அனைவரையும் ஒன்றிணைத்து, தேர்தல் வெற்றியை அடைவோம்.
“அதேபோன்று தேர்தலில் வெற்றியீட்டி, இந்த நாட்டில் புதிய அரசாங்கத்தை அமைத்து, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கிக் காட்டுவோம்” என்றார்.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago