Editorial / 2019 மார்ச் 08 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. கமல்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில், அரசாங்கத்தின் தலையீடு தொடருமெனத் தெரிவித்துள்ள ஜே.சி.அலவதுவல எம்.பி, தமிழ் , சிங்கள புத்தாண்டுக்கு முன்னர், சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில், நேற்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சர் நவீன் திஸாநாயக்க தலைமையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக் குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர், நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய பேச்சுவார்த்தைகளில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ள போதும் போதியளவு சம்பள அதிகரிப்புக்கு, இருதரப்பிலும் இணக்கம் எட்டப்படாத நிலையிலேயே, பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும் அவர் கூறினார்.
5 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago