Editorial / 2023 மே 01 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

புர்கா அணிந்துகொண்டு வந்த திருடன், கோழிகளை திருட முயன்றபோது அம்முயற்சி கைகூடவில்லை. அத்துடன், திருடன் கொண்டுவந்த கத்திகள் இரண்டையும் அப்பெண் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவம், பொகவந்தலாவை ஆரியபுரவில் ஞாயிற்றுக்கிழமை (30) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வீட்டிலுள்ள நாய் அதிகாலை 1.30 மணியளவில் கடுமையாக குரைத்துள்ளது. அதனையடுத்து வீட்டினுள் இருந்த பெண் வெளியே வந்து பார்த்துள்ளார்.
அங்கு புர்கா அணிந்து வந்த நபரொருவர் பதுங்கியுள்ளார். இதனை கண்ட அந்தப் பெண் அவருடன் மல்லுக்கட்டிய போது புர்கா கீழே விழுந்துள்ளது.
வந்தவர் ஆண் என கண்டதன் பின்னர், அவருடன் அப்பெண் மல்லுக்கட்டியுள்ளார். அத்துடன், 2 கத்திகளை பறித்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில், தனது மனைவியுடன் மல்லுக்கட்டியவர் திருடன் என்றும், தனது வீட்டில் வளர்க்கும் கோழிகளை திருடவே அத்திருடன் வந்துள்ளார் என்றும். திருடனைப் பிடிக்குமாறு பொகவந்தலாவை பொலிஸில் நிலையத்தில் அப்பெண்ணின் கணவன் முறைப்பாடு செய்துள்ளார்.
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் திருடன் ஓடுவதும், பெண் திருடனுடன் மல்லுக்கட்டுவதும் பதிவாகியுள்ளது.

3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago