Editorial / 2024 ஒக்டோபர் 14 , பி.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்.
மாட்டுக்கு புல் அறுக்க சென்ற மூன்று குழந்தைகளின் தந்தையான எம்.முருகன், வழுக்கி விழுந்து, மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வந்து சேர்க்கும் முன் மரணித்து உள்ளார் என நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவித்தார்.
இச் சம்பவம் நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மரே தோட்ட வலதல பிரிவில், திங்கட்கிழமை (14) மதியம் இடம் பெற்றுள்ளது.
வழுக்கி விழுந்த போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டமையால் மயங்கி விழுந்து கிடந்துள்ளார். அவரை பிரதேசவாசிகள் தூக்கியெடுத்து, வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே மரணித்துவிட்டார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது சடலம், டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
9 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago