R.Maheshwary / 2022 ஜூலை 11 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். யோகா
புரட்டொப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரட்டாசி பகுதியில் இருந்து புஸ்ஸலாவை நோக்கி பயணித்த பஸ் இன்று காலை விபத்துக்குள்ளானது.
இதன்போது சம்பவ இடத்திலேயே இருவர் மரணமடைந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்து, வகுப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
19 வயதுடைய காச்சாமலை பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கவிஷான் என்பவரும் 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான புஸ்பகுமார என்பவரும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பஸ்ஸில் 70 பேர் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தையடுத்து, ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் பஸ்ஸை எரித்துள்ள நிலையில், குறித்த வீதியில் பயணிகள் போக்குவரத்தில் இரண்டு பஸ்களே சேவையில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புரட்டொப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025