Editorial / 2019 மே 12 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கணேசன், நீ.பிரசாந்த், டி.கேதிஸ், ஆர்.ரமேஸ், எம்.கிருஸ்ணா
பூண்டுலோயா பிரதான வீதி, சீன் கீழ்பிரிவில், இன்று (12) மாலை இடம்பெற்ற விபத்தில், 16 வயது சிறுமி ஸ்தலத்திலேயே பலியானதுடன், இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தில், பூண்டுலோயா டன்சினன் அக்கரமலை பிரிவைச் சேர்ந்த சந்திரமோகன் சாலினி (வயது 16) என்ற சிறுமியே பலியாகியுள்ளார்.
அவரது மூத்த சகோதரியும் ஓட்டோ சாரதியும் பலத்தக் காயங்களுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீன் தோட்டத்திலிருந்து பூண்டுலோயா நகர் நோக்கிப் பயணித்த ஓட்டோ, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வளைவொன்றில் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இரு சகோதரிகளில் ஒருவரே பலியாகியுள்ளார் என்று, பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேதப் பரிசோதனைக்காக சிறுமியின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துத் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago