Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 ஜூலை 28 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். குமார்
ஹல்துமுல்லை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பூனாகலை மூன்றாம் பிரிவு தோட்ட மக்கள் பல வருடங்களாக காட்டு யானை பிரச்சினைக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள்.
அத்தோட்டத்தில் சுமார் நானூறு குடும்பங்களைச் சேர்ந்த 2500 பேர் வாழ்ந்து வருகின்றார்கள்.
அவர்களுள் பலர் தோட்டத் தொழிலில் ஈடுபடுவதுடன் பலர் விவசாயத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறு விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளுக்கு மத்தியில் விவசாயத்தில் ஈடுப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றார்கள்.
நாளாந்தம் இரவில் அப்பகுதிக்கு வரும் காட்டு யானைfள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்துவதுடன் தென்னை, வாழை, பலாமரம் போன்ற பயன் தரும் மரங்களையும் சேதப்படுத்தி செல்வதாக மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
இது தொடர்பில், உரிய அதிகாரிகளுக்கு பல தடைவைகள் தெரிவித்த போதிலும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .