2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

பெண்ணின் சடலத்தை தோண்ட நடவடிக்கை

Mayu   / 2024 ஓகஸ்ட் 21 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

ஹங்குராங்கெத்த கோனப்பிட்டிய சீனாக்கொலை தோட்டத்தில் புதைக்கப்பட்டுள்ள பெண் ஒருவரின் சடலத்தை தோண்டியெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மந்தாரநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு புதைக்கப்பட்டுள்ள பெண்ணின் சடலம் புதன்கிழமை  (21) காலை தோண்டியெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோனப்பிட்டிய பிரதேச வைத்தியசாலைக்கு தாதியாக சேவையாற்ற அக்கரப்பத்தனை பிரதேசத்திலிருந்து வருகை தந்திருந்த பெண் கடந்த ஆறு மாதங்களாக காணாமல் போயுள்ளதாக மந்தாரநுவர பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் தேடுதல் நடவடிக்க்கையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காணாமற் போன பெண் கோனப்பிட்டிய சீனாக்கொலை தோட்டப்பகுதியில்  புதைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக வலப்பனை நீதவான் நீதிமன்றத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நீதவானின் உத்தரவுக்கு அமைய உடலை தோண்டியெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட இரசாயன தடயவியல் புலனாய்வு பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டிருப்பதாகவும்  மந்தாரநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ள சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களை விசாரணை செய்ததில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக சந்தேக நபர்கள் அடையாளப்படுத்திய இடத்தில் உடலம் இருப்பதாக கண்டறியப்பட்டதாகவும் தோண்டப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X