R.Maheshwary / 2022 ஜூலை 21 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
வீட்டில் விழுந்து உயிரிழந்ததாகக் கூறி புதைக்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம் ஒன்பது மாதங்களுக்கு பின் மீண்டும் நேற்று( 20) மாலை தோண்டி எடுக்கப்பட்டது.
வத்துகாமம் -கண்டி வீதியில் வசித்து வந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயின் மரணம், சந்தேகத்திற்குரியது என பொலிஸாருக்கு கிடைத்த அநாமதேய கடிதம் ஒன்றின் பிரகாரம் இச் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.
தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட உத்தரவின் பிரகாரமே இச் சடலம்தோண்டி எடுக்கப்பட்டது.
வத்துகாமம் - கண்டி வீதியின் யடிராவன பகுதியைச் இவர், 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி தனது வீட்டில் விழுந்து ,கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.
அப்போது மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லாததால், சடலம் விடுவிக்கப்பட்டு 2021 அக்டோபர் 16 ஆம் திகதி பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இருப்பினும், 2021 நவம்பர் இரண்டாம் திகதி , ஒருவர் அநாமதேய கடிதம் மூலம் மரணம் சந்தேகத்திற்குரியது என்று பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதன் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தினால் பெறப்பட்ட உத்தரவின் பிரகாரம் சடலம் மீண்டும் பிரேத பரிசோதனைக்காக 20ஆம் திகதி மாலை தோண்டி எடுக்கப்பட்டது.
தெல்தெனிய பதில் நீதவான் சரத் பிரேமகுமார மற்றும் கண்டி சட்ட வைத்திய அதிகாரி திரு. சமீர குணசேகர மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் குற்றப் புலனாய்வு அதிகாரிகள், உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் ஆகியோர் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.’
.மீண்டும்தோண்டி எடுக்கப்பட்ட சடலம் தெல்தெனிய பதில் நீதவானின் உத்தரவுக்கமைய பிரேத பரிசோதனைக்காக கண்டி பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
40 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago