Janu / 2023 ஜூலை 04 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.திவாகரன் டி.சந்ரு
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் வெண்டிக்கோணர் பகுதியில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்
கொழும்பிலிருந்து நுவரெலியா வைத்தியசாலைக்கு தொழிலுக்காக வருகைத்தந்த வைத்தியர் ஒருவரின் காரொன்றே சீரற்ற காலநிலையால் பனிமூட்டம் நிறைந்து காணப்பட்டமையால் வேகக்கட்டுப்பாட்டையிழந்து வீதியோரத்தில் பயணித்த 25 வயதுடைய பெண்ணின் உடலில் மோதி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் வீதியில் நடந்து சென்ற பெண் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதிக்குச் சென்ற நானுஓயா பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


14 minute ago
18 minute ago
31 minute ago
10 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
31 minute ago
10 Nov 2025