2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

Freelancer   / 2021 டிசெம்பர் 10 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் கிளாயர்  ஜனபத கிராமத்தில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் மின் வேலி போடப்பட்டு இருந்ததாகவும், அதில் தவறுதலாக கை வைத்ததன் காரணமாக மரணம் சம்பவித்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 46 வயதுடைய  இரண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் . 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X