கு. புஷ்பராஜ் / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்ட மக்கள் வாழும் குடியிறுப்புப் பகுதிகளுக்குச் செல்லும் பிரதான வீதிகளுக்கு, வீதி விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்தார்.
பிரிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில், நானு-ஓயா பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமூக அபிவிருத்திக் குழு அங்கத்தவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் இருந்த பிரதேச சபை சட்டங்களின் காரணமாக, உள்ளூராட்சி மன்றச் செயற்பாடுகளை, பெருந்தோட்ட மக்களுக்குச் செய்ய முடியாமல் இருந்தது என்றும் ஆனால், 2018ஆம் ஆண்டு உள்ளூராடசி மன்றத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதையடுத்து, பெருந்தோட்ட மக்களுக்கு அதிகளவான அபிவிருத்திகளை முன்னெடுக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் கூறினார்.
இந்நிலையில், தோட்டங்களில் வாழும் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வரலாற்றி முதல் தடவையாக, வீதி விளக்குகளைப் பொருத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் இதன் ஆரம்பக்கட்ட பணிகள், கந்தபளையிலுள்ள கோட்லோஜ், பீட்ரூ, சமகில், நோனாதோட்டம், பாக் தோட்டம, எஸ்கேடல் ஆகிய ஆறு தோட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago