2026 மே 07, வியாழக்கிழமை

பெருந்தோட்டங்களில் விசேட வேலைத்திட்டம்

Editorial   / 2020 மார்ச் 17 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உமாமகேஸ்வரி

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டப் பகுதிகளில், கொரோனா வைரஸ் நோய் தடுப்புக்குறித்து விசேட வேலைத்திட்டங்கள் நேற்று (16) முன்னெடுக்கப்படுகின்றன.

வெளிநாட்டிலிருந்து குறிப்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குப் பிறகு மீண்டும் நாடு திரும்பியவர்கள் குறித்து தோட்ட மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிதாக வந்தவர்கள், வருபவர்கள் குறித்து உடனடியாக தோட்ட நிர்வாகத்துக்கு, சுகாதாரதுறையினருக்கு அல்லது அண்மையிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றர்

தோட்ட நிர்வாகங்கள், சுகாதாரத் துறையினர் தோட்ட தொழிலாளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று இது குறித்து அறிவுறுத்தி வருகின்றனர்.

அத்துடன் தோட்டங்களுக்கு அறிமுகமில்லாத அல்லது புதிதாக வருபவர்கள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இதேவேளை தோட்டத்திலுள்ள சிறுவர்கள், வயோதிபர்கள் வெயில் நேரங்களில் வெறுமனே வெளியில் செல்லக்கூடாது என்றும் வெளியில் சென்றவாகள் தமது கை, கால்களை சவர்க்காரமிட்டு கழுவ வேண்டுமெனவும் தோட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .