Gavitha / 2021 ஜனவரி 24 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
வெள்ளையர் ஆட்சிக்காலத்திலும் கம்பனிக்கார்களின் ஆட்சியிலும், மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நேர்ந்து விடப்பட்டவர்களாகவே இருக்கி்றனர் என, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் மலையக பிராந்திய செயலாளர் டேவிட் சுரேன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா கந்தப்பளை பார்க் தோட்ட மக்கள் எதிர்கொண்ட பிரச்சினை தொடர்பாக ஆராயும் பொருட்டு, தோட்டத்துக்கு வருகை தந்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பெருந்தோட்ட மக்கள், நிர்வாகங்களின் அடக்குமுறைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் வீடு, காணி போன்ற பிரச்சினைகளும் தேசிய சுகாதாரக் கட்டமைப்புக்கு உள்வாங்காதவர்களாகவும், தேசிய நிர்வாக சேவைகளுக்கு உள்வாங்கப்படாதவர்களாகவும் வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .