Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
பா.திருஞானம் / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டப் பாடசாலைகள், இந்திய அரசின் 895 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதென, கல்வி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைவாக, இந்திய அரசின் 395 மில்லியின் ரூபாய் செலவில் 31 பாடசாலைகளும் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில், 250 மில்லியன் ரூபாய் செலவில் 60 பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
மேலும், 2018ஆம் ஆண்டு மலையக பாடசாலைகளின் அபிவிருத்திக்கு மேலும் 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. கல்வி அமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் மூலம் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தில், 2016/2017 ஆம் ஆண்டுக்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கபட்டு வருகின்றன.
இந்தியாவின் 300 மில்லியன் ரூபாய் நிதி உதவியுடன் 30 பாடசாலைகள் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இந்திய அரசின் நிதி உதவியுடன், புஸ்ஸல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரி 95 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யபடவுள்ளது. இதற்கான ஒப்பந்தம், இந்திய அரசுடன் ஓரிரு வாரங்களில் கைச்சாத்திடப்படவுள்ளது.
இந்நிலையில், பெருந்தோட்ட பாடசாலைகள் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல் கூட்டம், கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலைகள் பணிப்பாளர் திருமதி சபாரஞ்சனின் ஏற்பாட்டில், மகரகம தேசிய கல்வியற் கல்லூரி கேட்போர் கூடத்தில், நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தெரிவு செய்யபட்ட மலையக பாடசாலைகளின் அதிபர்களும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago