2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பெருந்தோட்ட நிறுவனங்களை எச்சரிக்கும் ஜீவன்

Freelancer   / 2023 ஜூலை 03 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் வகையிலும், அவர்களுக்கான தொழில் உரிமைகளை வழங்குவதற்கு மறுக்கும் வகையிலும் செயற்படும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான்.

ஹட்டன் பெருந்தோட்ட யாக்கத்தின் நிர்வாகத்துக்குட்பட்ட தோட்டங்களில் நீண்டகாலமாக நிலவும் தொழில் பிணக்குகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான கூட்டமொன்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் கொழும்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் நடைபெற்றது.

இதன்போது  பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை மாத்திரம் சுரண்டிக்கொண்டிருக்கும் தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கபோவதாகவும், தீர்வை வழங்காவிட்டால் ஹட்டன் பெருந்தோட்ட யாக்கத்துக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X