டி. ஷங்கீதன் / 2020 மே 04 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்ட மக்களின் சுகாதார பாதுகாப்பு தொடர்பாக பெருந்தோட்ட கம்பனிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் இது தொடர்பாக பெருந்தோட்ட கம்பனிகள் அசமந்த போக்குடனேயே செயற்படுகின்றது என்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (04) கருத்துத் தெரிவித்துள்ள அவர்,
தற்பொழுது நாட்டின் அநேகமான தொழிற்துறை முடங்கிக்கிடக்கின்ற இந்த அசாதாரணமான சூழ்நிலையில், பெருந்தோட்ட தொழிலாளர்கள் மாத்திரமே தமது தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறினார்.
இவ்வாறான ஒரு நிலையில் அவர்கள் தங்களுடைய வேலை செய்கின்ற இடங்களில் முககவசம் அணிவதற்கோ அல்லது கொழுந்து நெருக்கின்ற பொழுதோ சமூக இடைவெளி என்பது அறவே பேனப்படுவதில்லை என்றும் இதன் காரணமாக தொழிலாளர்களுக்கு கிருமி தொற்று ஏற்படுவதற்கான அபாயகரமான ஒரு நிலை உள்ளது என்றும் கூறினார்.
எனவே இது தொடர்பாக தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு பெருந்தோட்ட கம்பனிகளையே சாரும் என்று கூறிய அவர், ஆனால் எந்த ஒரு பெருந்தோட்ட கம்பனியும் இது தொடர்பாக அக்கறை எடுத்து செயற்படுவதாக தெரியவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார். “
ஆனால் பெருந்தோட்ட காரியாலயங்களில் அனைத்து விதமான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றும் எனவே இதே வசதிகளை தோட்ட தொழிலாளர்களுக்கும் செய்து கொடுப்பதற்கு, பெருந்தோட்ட கம்பனிகள் முன்வரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago