டி.சந்ரு / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டத்தில், கடந்த சில வாரங்களால் தொடர்ந்து நிலவி வந்த சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரணம், ஏனைய பிரதேசங்களுக்கு வழங்கப்படுவதைப் போல வழங்கப்படுவதில்லை என, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஏ.பி. சக்திவேல் முறையிட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்ட செயலத்தில், மாவட்டச் செயலாளர் எம்.பீ.ஆர் புஸ்பகுமாரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின்போதே, அவர் இந்த முறைப்பாடை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த நாட்டில், எந்தவொரு பகுதியில் அனர்த்தங்கள் ஏற்பட்டாலும், இடர் முகாமைத்து அமைச்சின் மூலம், நிவாரணங்கள் வழங்கப்படுவதாகக் கூறிய அவர், ஆனால், பெருந்தோட்டப் பகுதியில் அனர்த்தங்கள் நிகழும்போது, இடர் முகாமைத்துவ அமைச்சின் மூலமான நிவாரணங்கள் கிடைப்பதில்லை என்றும் கூறினார்.
பெருந்தோட்ட பகுதியில் அனார்தங்கள் ஏற்படும்போது, பிரதேச செயலகங்கள் மூலம் 7 நாள்களுக்கு உலர் உணவு பொருள்கள், பெட்சீட் பாய் மாத்திரம் வழங்கப்படுகிறன என்றும் ஆனால், வேறு எந்தவொரு உதவியும் வழங்கப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இயற்கை அனர்த்தங்களால் பாதிப்பு ஏற்படும்போது, வெளிநாடுகளிலுள்ள செல்வந்தர்களிடமிருந்தும் அரசாங்கத்திடமிருந்தும் பாரிய தொகை நிதி, இடர் முகாமைத்துவ அமைச்சுக்கு வழங்கப்படும்போதும், அதில் சிறு தொகை நிதிகூட,பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்படுவதில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
எனவே, பெருந்தோட்ட மக்களையும் இந்த நாட்டு பிரஜைகளாக மதித்து, இயற்கை அனர்த்தங்களால் பாதிப்படையும் போதாவது, ஒழுங்கான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இதன்போது அவர் கேட்டுக்கொண்டார்.
இக் கலந்துரையாடலின் போது, நுவரெலியா மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் விவரங்கள், பிரதேச சபை தலைவர்கள் மூலம், மாவட்ட செயலாளருக்குக் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago