Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 நவம்பர் 20 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் பெருந்தோட்டத் தொழிற்துறையின் உச்ச அமைப்பான இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட சமந்த வித்யாரத்னவுக்கு சம்மேளனம் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது. மேலும், இலங்கை பெருந்தோட்டக் கைத்தொழிலுடன் இணைந்த சமூகங்களை மேம்படுத்தும் அதே வேளையில் அதனை அபிவிருத்தி செய்வதற்கு உதவும் கூட்டு முயற்சிகளுக்கு முழு ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்தது.
புதிய நிர்வாகத்தை வரவேற்று இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் லலித் ஒபேசேகர கருத்து தெரிவிக்கையில், "பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் (RPCs) உட்பட பெருந்தோட்டத் துறையானது பல தசாப்தங்களாக இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. புதிய அரசாங்கம் பெருந்தோட்டக் கைத்தொழில் முழுவதும் நிலையான அபிவிருத்திக்கு உகந்த சூழலை உருவாக்கும் என்றும், தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களை நிவர்த்தி செய்வதற்கும், இந்த அத்தியாவசியத் துறையின் மீள்தன்மை மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கைகளை உருவாக்குவதற்கும் நாங்கள் நம்புகிறோம்." என தெரிவித்தார்.
பெருந்தோட்டத் துறைக்கு, குறிப்பாக உழைப்பு, உற்பத்தித்திறன் மற்றும் நவீனமயமாக்கல் ஆகியவற்றின் தேவை தொடர்பில் குறிப்பிடத்தக்க சவால்கள் இன்னும் முன்வைக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் குறிப்பிட்டது. நீண்டகால உற்பத்தித்திறன் மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, பயிர் பல்வகைப்படுத்தல், நிலையான வேளாண் காடு வளர்ப்பு கொள்கைகளுடன், புத்தாக்கம், இயந்திரமயமாக்கல் மற்றும் தன்னியக்கமயமாக்கல் ஆகியவற்றை ஊக்குவிப்பது உட்பட, கூட்டு மற்றும் முழுமையான முறையில் இந்த சவால்களை எதிர்கொள்வதன் முக்கியத்துவத்தை சம்மேளனம் வலியுறுத்தியது.
நவீன தொழில்நுட்பங்களைப் பின்பற்றுதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் தேயிலை, இறப்பர் மற்றும் வாசனைப் பொருட்கள் போன்ற முக்கிய தோட்ட ஏற்றுமதிகளுக்கான உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிப்பதில் மேம்பட்ட அரசாங்க ஆதரவிற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் சம்மேளனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இத்தகைய முன்முயற்சிகள் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நிலப்பரப்பின் மத்தியில் துறையை முன்னோக்கி கொண்டு செல்வதில் கருவியாக இருக்கும்.
சவால்களை வெற்றிகொள்வதற்கும் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்துடன் கைகோர்த்து, பொருளாதார அபிவிருத்தி, பேண்தகைமை மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான தேசிய இலக்குகளுடன் இணைந்த ஒரு செழிப்பான பெருந்தோட்டத் துறைக்கு பங்களிப்பதில் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் உறுதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது..
47 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
2 hours ago