Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
ஊவா மாகாணத்துக்கு உட்பட்ட பெருந்தோட்டங்களில், 68 வைத்தியசாலைகள் உள்ள போதிலும், அந்த வைத்தியசாலைகளில் நிலவிரும் வரும் பல்வேறு குறைபாடுகளால், சிறந்த வைத்திய சேவையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு நோயாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று, ஊவா மாகாண சபை உறுப்பினர் எம்.சச்சிதானந்தன் சாடியுள்ளார். அத்தோடு, மேற்படி வைத்தியசாலைகளை, ஊவா மாகாண சுகாதார அமைச்சு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊவா மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், ஊவா மாகாண பெருந்தோட்டப் புறங்களிலுள்ள வைத்தியசாலைகள், முறையாக வழிநடத்தப்படுவதில்லை என்றும், இதனால், பெருந்தோட்ட மக்கள், முறையான வைத்திய சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக, நகர்ப்புறங்களிலுள்ள வைத்தியசாலைகளை நாட வேண்டிய நிலைக்கு, பெருந்தோட்ட மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் எனச் சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறு, நகர்ப்புறங்களிலுள்ள வைத்தியசாலைகளை நாடிச் செல்வதற்காக அவர்கள், பண விரயம், ஒரு நாள் தொழில் இழப்பு ஆகிய பிரச்சினைகளையும் எதிர்கொள்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
ஊவா மாகாணத்துக்கு உட்பட்ட பெருந்தோட்டங்களை, ஏழு கம்பனிகள் நிர்வகித்து வருவதோடு, மாகாணத்தில் 68 தோட்டங்களும் 372 தோட்டப் பிரிவுகளும் உள்ளன என்றும் சுட்டிக்காட்டிய அவர், இரண்டு இலட்சம் மக்கள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், ஊவா மாகாணத்தில், 206 தமிழ்மொழி மூலமான பாடசாலைகள் உள்ளன என்றும், இத்தகைய புள்ளி விவரங்களின் அடிப்படையில், சுகாதார சேவைகள் தரமானதாகவும், சிறப்பானதாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
6 minute ago
12 minute ago
13 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
13 minute ago