எஸ்.சதிஸ் / 2019 மார்ச் 19 , மு.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
நோர்வூட் பிரதேச சபையின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ நகரத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும், நேற்று முன்தினம் (17), திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இந்தத் திடீர் சுற்றிவளைப்பின் போது, உணவகங்கள், வர்த்தக நிலையங்கள், வெதுப்பகங்கள், விற்பனை நிலையங்கள் எனப் பல பகுதிகளில், பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, மனித நுகர்வுக்கு உதவாத பயறு, அரிசி, பச்சைக் கடலை, கடலை உள்ளிட்ட பல உணவுப் பொருள்கள் மீட்கப்பட்டன. சில உணவுகளில், புழுக்கள் காணப்பட்டதாகவும் எனவே, இவ்வாறு மனித நுகர்வுக்கு உதவாத பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாகவும் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
அத்தோடு, பாவனைக்கு உதவாத மண்ணெண்ணெய், நிலத்தில் ஊற்றி அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago