எஸ்.சதிஸ் / 2020 மார்ச் 17 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களை, கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், பொகவந்தலாவ வைத்தியசாலையில், விசேட பணிகள் இன்று (17) ஆரம்பிக்கப்பட்டதாக, பொகவந்தலாவ வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே.ஜயசூரிய தெரிவித்தார்.
இதற்கமைவாக வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை எடுப்பதற்காக வருவோர், மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று உடனடியாக வீடு திரும்பினர்.
அத்துடன் நோயாளர்கள் கூட்டமாக இருக்க வைக்கப்படாது, தூரதூர இருத்தப்பட்டனர் என்றும் வைத்தியாலையில் நோயாளர்கள் கூட்டமாகக் கூடுவதுத் தவிர்க்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
24 மணிநேரமும் கடமையில் ஈடுடுவதற்கு, வைத்தியர்களும் தாதியர்களும் தயார் நிலையில் இருப்பதாக, வைத்திய அதிகாரி ஏ.எஸ.கே.ஜயசூரிய மேலும் தெரிவித்தார்.
இதேவேளை வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளர்களை, ஐந்து நிமிடங்களுக்குள் பரீசிலனை செய்து அனுப்புவதாகவும் ஏனைய சேவைகளை இடைநிறுத்தி ஏனையவர்களுக்குக் கொரோனா பரவால் இருப்பதற்கான நடவடிக்கையை தாம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago