2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பொது சுகாதார பரிசோதகர்கள் இராகலையில் சோதனை

R.Maheshwary   / 2023 ஜனவரி 29 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

இராகலை பொது சுகாதார பரிசோதக அதிகாரிகளால்  நேற்று (28) இராகலை, உடப்புஸலாவ, எமஸ்ட், மெதவத்த ஆகிய நகரங்களில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

 குறித்த நகரங்களில் உள்ள  உணவகங்கள்,சிற்றுண்டி சாலைகள், கோழி மற்றும் மீன் இறைச்சி விற்பனை  நிலையங்கள்  ,அங்காடி விற்பனை நிலையங்கள் என்பன சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது  பாவனைக்குதவாத  உணவு பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

அத்துடன்,  விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு  எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்ததுடன், காலாவதியான பொருட்களை அழிக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .