2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

இனந்தெரியாத சடலம் மீட்பு

Freelancer   / 2025 ஓகஸ்ட் 12 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், மண்கும்பான் கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று (11) மாலை மீட்கப்பட்டுள்ளது.

சடலம் ஒன்று கடற்பகுதியில் மிதப்பதாகக் கிராம மக்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதன் அடிப்படையில் ஊர்காவற்துறைப் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்டனர்.

ஊர்காவற்துறைப் பொலிஸாரின் விசாரணைகளின் பின் சடலம் கடலில் இருந்து மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறைப்  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .