Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 14 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “குழம்பியுள்ள குட்டையில் மீன் பிடிப்பதைப் போல“ தனியார் நிறுவனங்களும் தன்னிச்சையாக பொருட்களின் விலையை அதிகரித்துக்கொண்டே செல்கிறார்கள். இதன் விளைவாக நடுத்தர
லாபம் ஈட்டக்கூடிய மக்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது.
காலநிலை மாற்றம் பொருட்களின் விலை ஏற்றம் வெளியாட்கள் மூலம் பெருந்தோட்ட நிலங்கள் அபகரிப்பு என இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு மலையக மக்கள் தொடர்ந்து முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இத்தகைய செயற்பாடுகளை அரசாங்கமும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்க விடயமாகும். .மலையக மக்களின் இருப்பு மற்றும் அதிகரித்து வருகின்ற அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பாக, பாராளுமன்றத்தில் இரண்டு தினங்களுக்கு விவாதங்களை மேற்கொள்ளுமாறு சபாநாயகருக்கு, மின்னஞ்சல் ஊடாககோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்தார் .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .