Editorial / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ. ரமேஸ்
நோர்வூட், அக்கரப்பத்தனை பிரதேச சபைகளுக்கு உட்பட்ட டயகம - போடைஸ் வீதியை, வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறுப்பேற்றுள்ளதாகவும் அச்சபையின் கீழ் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும், நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் குழந்தை ரவி தெரிவித்துள்ளார்.
இவ்வீதியை மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை, உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றதற்கான வர்த்தமானி அறிவித்தல், விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வீதியை அபிவிருத்தி செய்வதில், பல்வேறு குளறுபடிகள் உள்ளதால், மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை, இவ்வீதியைப் பொறுப்பேற்க வேண்டும் என்று, நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போது, மத்திய மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோனின் கவனத்துக்குத் தான் கொண்டு சென்றதாக, அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கேட்டறிந்து கொண்ட மத்திய மாகாண ஆளுநர், போடைஸ் வீதியை, வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறுப்பேற்க வேண்டும் என்றும் வீதியைப் பொறுப்பேற்பது தொடர்பில், உடனடியாக வர்த்தமானி ஊடாக அறிவிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
அத்துடன், வீதியில் காணப்படும் குறைபாடுகளை, மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை பார்வையிட்டு, குறைபாடுகளைப் நிவர்த்தி செய்யவேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியதாகத் தவிசாளர் குழந்தைவேல் ரவி மேலும் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago