R.Maheshwary / 2022 செப்டெம்பர் 04 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
ஹெரோய்ன், கஞ்சா ஆகிய போதைப் பொருள்களை தம்வசம் வைத்திருந்த 7 பேர் ஹட்டன் கலால் அலுவலக அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 310 மில்லிகிராம் ஹெரோய்னை வைத்திருந்த சந்தேகநபர் ஹட்டன்- பண்டாரநாயக்கபுர பகுதியைச் சேர்ந்த 28 வயதானவர் என கலால் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏனைய 6 சந்தேகநபர்களிடம் இருந்தும் கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் குறித்த அறுவரும் போதைப் பொருளுக்க அடிமையான 25- 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட அறுவரும் குடாகம, பண்டாரநாயக்கபுர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட 7 பேரும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026