Editorial / 2019 பெப்ரவரி 18 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ, எஸ்.சதீஸ்
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை மேற்கொண்டபோது, போதைப் பொருள்களுடன் கைதான 17 பேரும், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி பொலிஸுக்கு வருமாறு ஹட்டன் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி, தியகல சோதனைச் சாவடியில் வைத்து, நேற்று முன்தினம் இரவு (16) ஹட்டன் குற்றத்தடுப்புப் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, மேற்படி 17 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
ஹட்டன் பொலிஸ் வலயத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ரவிந்திர அம்பேபிட்டியவின் பணிப்புரைக்கமைவாக, ஹட்டன் குற்றத்தடுப்புப் பொலிஸார், திடீர் சோதனையை மேற்கொண்டுள்ளதுடன், மேற்படி 17 பேரையும் கைதுசெய்துள்ளனர்.
கொழும்பு, மாத்தறை, காலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்களிடமிருந்து கேரளா கஞ்சா, ஐஸ், மதன மோதகம் ஆகிய போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளவெனத் தெரிவித்த பொலிஸார், அவர்கள் அனைவரும் வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்றும் தெரிவித்தனர்.
18 minute ago
48 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
48 minute ago
2 hours ago
3 hours ago