R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வன்வே பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் நேற்று (21) மாலை பசறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 28 போதை மாத்திரைகளும் 800 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பசறை குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, வன்வே பகுதியில் சோதனையை மேற்கொண்ட போதே 28 வயதான சந்தேகநபர் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை பதுளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026