Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 ஜூலை 04 , பி.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஷ் கீர்த்திரத்ன
மாத்தளை, வரகாமுர பிரதேசத்தில், கூடுதலான விலைக்கு விற்பனைச் செய்வதற்காக எரிபொருள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, அந்த இடத்தை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்து, குழப்பங்களை ஏற்படுத்தினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த இடத்தை பொலிஸார் சுற்றிவளைக்கச் சென்றிருந்த போது, அங்கிருந்த நபரொருவர் பெட்ரோல் போத்தலொன்றை உடைத்து வீசியுள்ளார். மற்றுமொருவர் அந்தப் போத்தலுக்கு தீ மூட்டியுள்ளார். அதிலிருந்து எழும்பிய தீயினால், ஒருவரின் பாதம் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளது.
ஏனைய இருவரும், அந்த போத்தலை தூக்கி, எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இடத்தின் மீது வீசியுள்ளனர். இதனால் அந்த இடமே தீயில் கருகி நாசமாகியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago