2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

’போராட்டத்தை திசைதிருப்ப சதி’

Kogilavani   / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம்  ரூபாய்  அடிப்படைச்  சம்பளம் மற்றும் தொழிலாளர்களின் நலன்சார்ந்த  உரிமைகளுக்காக, எதிர்வரும் (05)ஆம் திகதி மலையகம் உள்ளிட்ட நாடுதழுவிய ரீதியில், ஒருநாள் அடையாள பணிபகிஷ்கரிப்புக்கு  பொதுஅழைப்பு  விடுக்கப்பட்டுள்ள நிலையில், இப் போராட்டத்தை திசைத்திருப்ப சிலர் சதிசெய்கின்றனர் என்று, நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்தார்.

தொழிலாளர்களின் சம்பள உரிமைக்காகவே, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது என்றும் இந்தப் போராட்டம் காங்கிரஸின் தனி பலத்தை நிருபிக்கவல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், இந்தப் போராட்டமானது, தொழிலாளர் உரிமைக்காக நடத்தப்படும் உரிமைப் போராட்டம் என்பதை உணர்ந்து, நுவரெலியா பிரதேச சபைக்கு மக்களின் வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் அனைவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க  முன்வர வேண்டும் என தவிசாளர் அழைப்பு விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X