Editorial / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அனைவரும் ஏனைய மதங்களை அரவணைத்துச் செயற்படவேண்டும் என்றும், சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார் என, அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மத நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடலொன்று, சமீபத்தில் சபாநாயகர் கரு ஜயசூரியவின் காரியாலத்தியில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் உலக சைவ திருச்சபையின் இலங்கைக்கான தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் மேற்கொண்டிருந்தார்.
இந்தக் கலந்துரையாடல் குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டில், மத நல்லிணக்களம் இன்றியமையாதது என்பதாலேயே, இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்றும் அவர் கூறினார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, பௌத்தமும் வைசமும் இணைந்து பயணிப்பதில் எந்தவிதமான தடங்களும் இல்லை என்றும் இரண்டு மதங்களுக்கு இடையிலும் பாரியளவு வித்தியாசங்கள் எதுவும் இல்லை என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார் என்று, அமைச்சர் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago