2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பாடசாலைக் கூரை உடைந்து விழுந்ததில் 18 மாணவர்கள் காயம்

Menaka Mookandi   / 2017 மார்ச் 30 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, வத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிமல்வத்த நவோத்யா பாடசாலையில், தரம் 5 வகுப்பறைக் கூரை, திடீரென உடைந்து விழுந்ததில், 18 மாணவர்கள் காயமடைந்த நிலையில், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் நிலவி வரும் கடும் மழை காரணமாக, வகுப்பறைக் கூரையின் ஒரு பகுதி, இன்று காலை 10 மணியளவில் உடைந்து விழுந்துள்ளனர்.

இதனால், குறித்த வகுப்பில் கல்விகற்று வந்த மாணவர்களில் 18பேர் காயமடைந்த நிலையில், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, வத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .