2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பின்தங்கிய கிராமங்களை அபிவிருத்தி செய்ய தென்கொரியா உதவி

Kogilavani   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணிஸ்ரீ

இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள பின்தங்கிய பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு தென்கொரியா முன்வந்துள்ளது.

தென்கொரியாவின் சீமோல் உலகமயமாக்கல் அறக்கட்டளை, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது. இவ் அறக்கட்டளையின் இலங்கைக்கான பணிப்பாளர் சீ.வூ.ஹியனுக்கும் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்துக்குமிடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை(8), மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போதே பின்தங்கிய கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.   

மேற்படி மாவட்டங்களில் உள்ள பின்தங்கிய பிரதேசங்களை அபிவிருத்தி செய்து, அப்பிரதேசங்களில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் மற்றும் அப்பிரதேசங்களில் சுயதொழில்கள் உட்பட பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கும் அதற்கான பயிற்சிகளை தென்கொரியாவின் மூலம் வழங்குவதற்கும்; மேற்படி அமைப்பு இணங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .