Princiya Dixci / 2016 மே 03 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன்
காவத்தைப் பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் நாவலப்பிட்டி பார்கேபல் தோட்டத்தில் 70ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
அத்தோட்டத்தின் 20ஆம் இலக்கத் தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண்ணொருவரை, நேற்று திங்கட்கிழமை (02) காலை பாம்பு தீண்டியுள்ளது.
இதனையடுத்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்ட பெண், மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு இன்று (03) காலை மாற்றப்பட்டுள்ளார்.
தோட்ட நிர்வாகத்தால் கவனிப்பாரற்ற நிலையில் சுத்தம் செய்யப்படாத தேயிலை நிலங்களில் விஷ ஜந்துகள் அதிகரித்து வருவதனால் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அச்சம் நிலவுவதாகவும், உடனடியாக தோட்ட நிர்வாகம் தேயிலை நிலங்களைச் சுத்தப்படுத்தித் தருமாறும் கோரியே இந்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அத்தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
16 minute ago
25 minute ago
31 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
25 minute ago
31 minute ago
42 minute ago