2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

புற்றுநோய் தொடர்பில் தெளிவுப்படுத்தும் செயலமர்வு

Sudharshini   / 2015 ஒக்டோபர் 31 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய புற்றுநோய்க் கட்டுப்பாட்டு நிகழ்சித் திட்டத்தின் மூலம் புற்றுநோயை தடுப்பது குறித்து அரச அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தும் செயலமர்வு, நேற்று (30) சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சப்ரகமுவ மாகாண சபையில் அமைந்துள்ள சுகாதார வைத்திய நிலையம் ஏற்பாடு செய்திருந்த இச்செயலமர்வில், தேசிய புற்றுநோய்க் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் புற்றுநோய் தொர்பான விசேட வைத்தியர்களான பிரசன்ன ஜயசேகர, துஷான் பெந்தகே, அநுசாந்தன், கோசல முத்துகுமார ஆகிய விசேட வைத்திய நிபுனர்கள் கலந்துகொண்டு செயலமர்வை நடத்தினர்.

மேற்படி செயலமர்வில் சப்ரகமுவ மாகாண சபை மற்றும் பிரதேச சபை, மாகாண சுகாதார மத்திய நிலையத்தில்  கடமைப்புரியும் செயலாளர்கள், அரச அதிகாரிகள் உட்பட பலர்; கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .