Kogilavani / 2016 ஜூன் 05 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜ்
அக்கரப்பத்தனை, ஹோல்புறூக் நகரத்தின் ஊடாக பச்சபங்களா தோட்டத்துக்குச் செல்லும் பிரதான பாதையிலுள்ள பாலத்தை புனரமைத்து தருமாறு கோரி பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இப்பாலத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்தது. இதுவரை இப்பாலம் புனரமைக்கப்படாமையால் வாகன சாரதிகளும் பொதுமக்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இப்பாலத்தை நல்லதண்ணி, குடமல்லி, ஊட்டுவள்ளி, சென்ரெகுலாஸ், உட்லெக் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இத்தோட்ட மக்கள் வைத்தியசாலைக்குச் செல்வதாக இருந்தால் சுமார் 10 கிலோ மீற்றர் தூரம் சுற்றிச் செல்லவேண்டும். இதன் காரணமாக போக்குவரத்துக்கு அதிக பணம் செலவு செய்ய வேண்டும் எனவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த காலங்களில் குளவி கொட்டுக்கு இலக்காகிய தொழிலாளர்களை வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லமுடியாமல் பல சிரமங்களை சந்தித்ததாக இவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்பநப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இப்பாலத்தை புனரமைக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரினர்.
இவ்வார்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


16 minute ago
25 minute ago
31 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
25 minute ago
31 minute ago
42 minute ago