Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
13 வருடத்திற்கு முன்னர் சவூதி நாட்டில், வீட்டு வேலைக்குச் சென்ற தனது மகளை மீட்டுத்தருமாறு, உருக்கமுடன் கண்ணீர் மல்க, ஹட்டன் குடாகம பகுதியைச் சேர்ந்த தாயொருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சவூதி நாட்டின், டபார் நகரில், வேலைக்குச் சென்ற தனது மகள் தொடர்பில், இது வரையில் எவ்வித தகவல்களும் இல்லை என, ஹட்டன் குடாகம பிரதேசத்தைச் சேர்ந்த, 56 வயதான தாயான, சிவலிங்கம் விஜயலட்சுமியே, இவ்வாறு கண்ணீருடன் தெரிவித்தார்.
குடும்ப வறுமை காரணமாக, கடந்த 2005ஆம் ஆண்டு, ஒகஸ்ட் மாதம் 09ஆம் திகதி, சுப்பையா விக்னேஸ்வரி என்ற குறித்த பெண், கொழும்பு தனியார் வெளிநாட்டு முகவர் நிலையத்தினூடாக, தனது 23ஆவது வயதில், சவூதி நாட்டுக்கு சென்றுள்ளார். இருப்பினும், ஆறு மாதங்களின் பின்னர் தொலை பேசியில் உரையாடிய அவர், அதன் பின்னர் 8 வருடங்களின் பின்னரே மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தான் ஏதோவொரு பிரச்சினையில் சிக்கிக்கொண்டுள்ளதாகவும், வருட இறுதிக்குள், இலங்கைக்கு வருவதாகவும் தெரிவித்ததாக, குறித்த பெண்ணின் தாயார் தெரிவித்தார்
இதேவேளை, வெளிநாடு சென்ற தனது சகோதரிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உணர்ந்த நிலையில், கொழும்பில் அமைந்திருந்த குறித்த தனியார் வேலை வாய்ப்பு நிலையத்திற்குச் சென்ற போது, அங்கு அந்த வேலைவாய்ப்பு நிலையம் மூடப்பட்டிருந்ததாகவும், பாதிப்புக்குள்ளான பெண்ணின் சாகோதரர் சுப்பையா சுதாகர் தெரிவித்தார்
இந்நிலையில், குடும்ப வறுமை காரணமாக, வெளிநாடு சென்ற தனது மகளை பாதுகாப்பாக மீட்டுத்தருமாறு, தாய் மற்றும் சகோதரர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago