எஸ்.சதிஸ் / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாசதான் என்பதை, நாட்டு மக்கள் தீர்மானித்துவிட்டனர் என, தேசிய மக்கள் சபையின் தலைவர் சமிரபெரேரா தெரிவித்தார்.
ஹட்டனில், நேற்று (14) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிக்கையில்,
மக்களது கட்டளையை, எவராலும் மாற்ற முடியாது என்றும் எனவேதான், தினமும் ஒவ்வொரு பிரதேசங்களுக்கு விஜயங்களை மேற்கொண்டு, மக்கள் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியை தான் பாதுகாத்ததாக, ஐ.தே.கவின் தலைவர் கூறிவருவதாகவும் அவர் எதைப் பாதுகாத்தார் என்பது தொடர்பாக தங்களுக்குத் தெரியும் என்றும் கூறிய அவர், ஐ.தே.கவின் தலைவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல என்றும் கூறினார்.
அத்துடன், அவருக்கு அந்தத் தலைமை பதவி, ஐ.தே.கவின் முன்வரிசைத் தலைவர் உயிரிழந்தமையாலேயே கிடைத்தது என்றும் கூறினார்.
ஐ.தே.கவின் தலைவர் என்று கூறுபவர், ஜனாதிபதி தேர்தலில் இரண்டு முறையும் பொதுத் தேர்தலில் 6 முறையும் மாகாண சபைத் தேர்தலில் 12க்கும் அதிகளவிலும் தோல்வியடைந்துள்ளார் என்றும் ஆனால், கேட்டால், கட்சியைப் பாதுகாத்ததாக் கூறுகின்றனார் என்றும் அவர் கூறினார்.
52 minute ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
5 hours ago
5 hours ago
6 hours ago